24 66594a594cfbe
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

Share

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

ஈழத்தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயமே, இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு “முக்கிய தீர்வு” என்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல்( Wiley Nickel) தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று தீர்மானத்தை முன்வைத்த பின்னர் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தத் தீர்மானம் முக்கியமான முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை, தமிழ் சமூகத்தின் துன்புறுத்தல் மற்றும் சுயநிர்ணயத்தின் அவசியத்தைப் பற்றிய தமது குரலை அமெரிக்காவில் ஒலிக்கச் செய்வதற்கான மிக முக்கியமான முதல் படியாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த மற்ற ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களால் அனுசரணை செய்யப்பட்ட இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கையை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை உட்பட கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

இதற்காக தமிழர்கள் மத்தியில் சுதந்திரமான வாக்கெடுப்பையும் அது கோருகிறது. இந்த விடயம் தொடர்பாக தாம், கனடாவின் இரண்டு கட்சி குழுவுடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட நிக்கல், அவர்களின் முழு ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய படியாகும் என்று நிக்கல் கூறியுள்ளார். இதற்கான தரவுகள், ஆதாரங்கள் தெளிவாக உள்ளன, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது சுயசரிதையில் இலங்கையில் நடக்கும் வெளிப்படையான இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு இல்லாததை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு முக்கியமான முதல் பகுதி என்று தாம் நினைப்பதாக நிக்கல் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிக்கல் அந்த வாக்கெடுப்பு இலங்கையில் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...