24 664e469f57c83
இலங்கைசெய்திகள்

கனடாவில் இருந்து யாழ் வந்த இருவர் கைது

Share

கனடாவில் இருந்து யாழ் வந்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தில்( Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...