இலங்கை
இலங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு சீன அரசாங்கம் வாய்ப்பு
சீன அரசினால் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக முன்னெடுக்கப்படும் விசேட செயலமர்வில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி எம்.எஸ்.நளீம் (M.S. Naleem) பங்கேற்கவுள்ளார்.
குறித்த செயலமர்விற்காக அவர், இன்றைய தினம் (21.05.2024) சீனாவிற்கு (China) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
சீன தூதரகத்தின் பொருளாதார வணிக அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் இலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆளுகையில் அனுபவ பரிமாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வானது, சீனாவின் பீஜிங் (Beijing) நகரில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 21 பேரில் ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக எம்.எஸ்.நளீமே இடம்பெற்றுள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கமையவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் தேர்வு மற்றும் வழிகாட்லுக்கமையவும் அக்கட்சியின் பிரதிநிதியாக நளீம், குறித்த செயலமர்வில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.