இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் உதவியுடன் நாட்டை பிளவுபடுத்த முயலும் ஈழவாதிகள்

Share
24 66486919afd42
Share

அமெரிக்காவின் உதவியுடன் நாட்டை பிளவுபடுத்த முயலும் ஈழவாதிகள்

அமெரிக்காவின் (United States of America) உதவியுடன் நாட்டை இனரீதியாகப் பிளவுபடுத்த முயலும் ஈழவாதிகளின் முயற்சியை, எதிர்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் வசந்த பண்டார (Vasantha Bandara) வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பண்டார இந்த விளக்கத்தை கோரியுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் (Punjab) பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்திற்கு தொடர்ந்து மேற்கத்திய ஆதரவு வழங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆராயப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்களத்தில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும், மேற்குலகத் தலைநகரங்களில் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகள் மும்முரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சி நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தீர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான, ஒரு பகுதியாகவே பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்படுகிறது.

சுதந்திர வாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையை வழங்கும் தீர்வை அமெரிக்க ஆதரவு ஈழவாதிகள், அமெரிக்கா மற்றும் பிற சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவுடன், வலியுறுத்தும் போது, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று வசந்த பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதாரமற்ற போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தவறியமைக்காக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் பண்டார தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உரிய வகையில், எதிர்கொள்ளாவிட்டால், மே 18 அன்று கனேடிய தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் பிரகடனம் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச மீதான பொருளாதாரத் தடை போன்றவற்றை விட வாக்கெடுப்பு விடயம் மிக மோசமாக இருக்கும் என்றும் வசந்த பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...