இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும்

Share
24 6644089895083 1
Share

கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும்

நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை ஏற்படுத்தித் தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தள்ளார்.

இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

திருகோணமலை – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் இரவு வேளையில் பொலிஸாரால் அடாத்தான முறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோன்று அம்பாறை மாவட்டம், கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வுக்குப் பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அராஜகச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மே மாதம் உணர்வுபூர்வமானது.

அவர்கள், இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கான புனிதமான மாதமே இந்த மே மாதமாகும். அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தை யாரும் நிராகரிக்கவே முடியாது.

அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவதும், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும்.

அதேநேரம், திருகோணமலை, சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரவு வேளையில் அவர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸார், அவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

அம்பாறை, கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு தடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அடாவடிகள் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். இந்தவிதமான செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இது தொடர்பாகக் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். கிழக்கில் பொலிஸார் இந்த அராஜகங்களைப் புரிய யார் அதிகாரம் தந்தது என்று அவரிடம் வினவியுள்ளேன்.

எனது வன்மையான கண்டனங்களை அவரிடம் தெரிவித்துள்ளேன். கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுகின்றேன்.” என்றார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...