எம்.பிக்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம்: ரணில் கைக்கு அதிகாரம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil wickremesinghe) முன்வைக்க சபாநாயகர் மகிந்த யாப்பா (Mahinda Yapa Abeywardena) அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் தாம் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அதிபரிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக சபாநாயகர் நாடாளுமன்ற குழுவில் தெரிவித்துள்ளார்.
116 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட வாகன அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவகார குழுவிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.