இலங்கை
ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்
ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு (Hirunika Premachandra)எதிரான வழக்கொன்றை விசாரிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
குறித்த நபர் பெண்ணொருவரைத் தாக்கிவிட்டுத் தலைமைறைவாகி இருந்த நிலையில் , அது தொடர்பில் ஹிருணி்க்கா தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிருணிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.