இலங்கை
சுகாதார ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு: அமைச்சர் புதிய தகவல்
சுகாதார ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு: அமைச்சர் புதிய தகவல்
தாதியர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின்(Gamini Waleboda) கேள்விக்கு பதிலளிக்கும் போதே இன்று (07) சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர்களை தாதியர் சேவைக்கு விரைவில் நியமிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை, தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.