இலங்கைசெய்திகள்

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

Share
24 66340b478b590
Share

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 2024 மார்ச் மாதத்தில் தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 19131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தென்னை தொடர்பான பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் (Roshan Fernando) கையளிக்கப்பட்டது.

அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் 38,065 மெட்ரிக் தொன் ஆகும். கிடைத்த வருமானம் 5725 மில்லியன் ரூபா. 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியாகும்.

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயற்படுத்தப்பட்ட காபன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூ.4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 3122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவு 7,059 மெட்ரிக் தொன். தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன் ஆகும்.

பவுடர் ஆக்கப்பட்ட தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...