இலங்கை
இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்
இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்
எல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படும் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பலங்கொட ரஜவக பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த நீலம் மற்றும் வெள்ளை கொரண்டம் இரத்தினக்கல் 802 கிலோ எடை கொண்டதாகும்.
மேலும் அது பல கோடி ரூபா பெறுமதியானது என இரத்தினக்கல்லுக்கு பொறுப்பான குஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வாங்குபவர்கள் இந்த கல்லை பரிசோதித்து விலைகளை வழங்கியுள்ளனர். மேலும் பலர் அதனை கொள்வனவு செய்வதற்கான விலையை வழங்க முடியும்.
சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளுடன், இலங்கையின் கொருண்டம் வகையின் மிகப் பெரிய கல் என குறிப்பிடப்படுகிறது.
இந்த இரத்தினக்கல் கல், எல்ல மவுண்ட் ஹெவன் ஹோட்டலில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த அபூர்வமிக்க இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்ட போதும், அது தொடர்பான பரிசோதனைகள் கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.