இலங்கைசெய்திகள்

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

Share
24 66177aeda517e
Share

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் விவாதத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) குற்றம் சுமத்தியுள்ளார்.

அறிக்கையொன்றிலேயே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே (Anura Kumara Dissanayake ) முதன்முதலாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) விவாதத்திற்கு அழைத்தார் என்பதை நான் நினைவூட்டுகின்றேன்.

2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அனுரகுமார திசாநாயக்க, சஜித்துடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், வெளிப்படுத்தப்படாத சில காரணங்களுக்காக குறித்த விவாத சவாலை சஜித் பிரேமதாச நிராகரித்ததார்.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான மாற்று விவாதத்தை தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையுடன் முன்மொழிந்தனர்.

இந்தநிலையில், அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் விவாதத்தின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...