இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

24 6615dfedc00cc
Share

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

சுற்றுலா விடுதிகளில் உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலாது உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட ப்ரோக்கோலி 300ரூபாவாகவும், 3,000ரூபாவுக்குவிற்ற சிவப்பு முட்டைக்கோஸ் 200ரூபாவாகவும் , 1,500ரூபாவுக்கு விற்ற கீரை 50 ரூபாவாகவும், 1,800ரூபாவுக்கு விற்ற ஐஸ்பர்க் 150 ரூபாவாகவும் விலை குறைவடைந்துள்ளது.

இது தவிர 350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கொத்தமல்லி 80 ரூபாவாகவும், 1700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு கீரையின் விலை 250 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

இவ்வகை கீரைகளின் கேள்வி அதிகமாக இருந்தாலும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான தேவை குறைவாகவே காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா நகரத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து நாளொன்றுக்கு 2000 முதல் 3000 கிலோகிராம் வரையான சாலாது கீரைகள் தேவைப்படுவதாக நுவரெலியா(Nuwara Eliya) பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...