24 661569a7261dd
இலங்கைசெய்திகள்

பிரான்ஸ் இளைஞரை ஏமாற்றி தலைமறைவான கிளிநொச்சி யுவதி

Share

பிரான்ஸ் இளைஞரை ஏமாற்றி தலைமறைவான கிளிநொச்சி யுவதி

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு பழகியுள்ளனர்.

தனது பெற்றோர் போரில் உயிரிழந்த நிலையில் தனது மூத்த சகோதரியுடன் தான் வாழ்ந்து வருவதாக பிரான்ஸ் இளைஞரிடம் யுவதி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு, திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதிக்கு இளைஞன் 60 இலட்சம் ரூபா பணம், 42 பவுண் நகை, பரிசுப் பொருட்கள் என்பனவற்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின்னர் குறித்த இளைஞன் கிளிநொச்சிக்கு வந்த போது யுவதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தலைமறைவாகியுள்ள யுவதி தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...

unnamed
இலங்கைசெய்திகள்

செல்வ ஏற்றத்தாழ்வு: தெற்காசியா உலகின் மோசமான பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது – புதிய அறிக்கை!

இலங்கை அங்கம் வகிக்கும் தெற்காசியப் பிராந்தியம் உலகில் மிக அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு...

2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட...

25 693694bdec0d9
உலகம்செய்திகள்

நாங்கள் தயார்: ட்ரம்ப் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி!

தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் போரைப் பயன்படுத்துவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...