24 6615a40e1c3fd
இலங்கைசெய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்!

Share

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்!

மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால் அந்நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நுகர்வோர் கடன் சுட்டியில் சாதக நிலை பதிவாகியுள்ளது.

தற்பொழுது கடன் நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நாட்டில் தொடர்ச்சியாக வட்டி வீதம் அதிகரித்துச் செல்லும் நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணவீக்க நிலைமைகள் குறித்து கனேடியர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக சமூகக் கடப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைக்காக செலவிடப்பட்ட தொகைகளை மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த நாள் விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றில் பங்குபற்றுவதனையே மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...