இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

24 660799b4c9dbe
Share

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்மான் படையணி என்ற புதிய படையணி ஒன்றை தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசியலில் தீவிரமாக இயங்கிய கருணா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் செயற்பாட்டு ரீதியாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

மேலும், ராஜபக்சர்களின்(Rajapaksa Family) தீவிர ஆதரவாளனாகவும் கருணா செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களால் கைவிடப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்தநிலையிலேயே தற்போது இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதாக கருணா அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Share
Related Articles
8 9
உலகம்செய்திகள்

ஒப்பரேஷன் சிந்தூர் : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...

9 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுடன் மோதல்: இந்தியாவின் பல விமான சேவைகள் இரத்து

இன்று அதிகாலையில் பாகிஸ்தானின்(Pakistan) எல்லைக்கு அருகிலுள்ள பல இடங்களில் இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து,...

10 9
இலங்கைசெய்திகள்

ராஜபக்‌ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் விரைவில் கைது

எதிர்வரும் ஒருசில வாரங்களுக்குள் ராஜபக்‌ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள்...

6 10
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களின் கோட்டையை சரித்த அநுர

நடைபெற்று முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல எதிர்மறையான முடிவுகள் வந்துள்ள நிலையில்  இந்த விடயம்...