24 660513bde8509
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

Share

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் சட்டவிரோத விடுதிகளாக செயற்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த விடுதிகள் சிக்கியுள்ளன.

சட்டவிரோத விடுதிகளாக இயங்கி வரும் மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களைக் கண்டறிந்த பொலிஸார் அந்த நிலையங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 137 பெண்கள் உட்பட மொத்தம் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்னர்,

இந்நிலையில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...