24 65fdaf1db7482
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (22.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன.

அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்.

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானித்துள்ளன.

பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதக்கம் வெல்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர்.

கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம்.

அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...