tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

Share

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டுமென சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வுக்கு யாழ் மக்களால் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றைய தினம் மாத்திரம் இந்த கண்காட்சிக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயம். இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டும். ” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...