எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி
எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளமையினால் நுகர்வோருக்கு முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.