இலங்கை
எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும்
எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும்
தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களினால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகளை கிரமப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரச சேவை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது ஆட்சிக் காலத்தில் அரச பணியாளர்கள் வினைத்திறனான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.