10 5 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவை உலுக்கிய படுகொலைகள் : அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Share

கனடாவை உலுக்கிய படுகொலைகள் : அதிர்ச்சியில் இலங்கையர்கள்

கனேடிய தலைநகரான ஒட்டாவில் இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டாவா புறநகரான Barrhaven பகுதியில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் சமூகம் பேசமுடியாது மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கனடா சங்கத்தின் முன்னாள் தலைவர் நாரத கொடித்துவக்கு, ஊடகங்களில் கருத்து வெளியிடுகையில், “நாங்கள் நெருங்கிய சமூகம், நாங்கள் இங்கு வாழ்வதற்காக வந்துள்ளோம்.

“நான் இன்று சுமார் 40, 50 பேரிடம் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாம் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஒன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை எப்படி உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் முதல் இந்த குடும்பம் ஒட்டாவாவில் வாழ்ந்து வந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தந்தையும் கணவரும் சமூகத்தில் ஒரு பெரிய உதவியாளர் என்றும் அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் நபராகும்.

“ஒரு அன்பான உள்ளம் கொண்டவர், மிகவும் நட்புடன், சமய விடயங்களுக்கு உதவி செய்தவர். நாங்கள் அவரைப் பற்றி கவலைப்படுகிறோம், ஏனென்றால் அவர் மட்டுமே அவரது குடும்பத்தில் மீதமாக உள்ளார்.

அவருக்கு உதவ ஒரு சமூகமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம்” என நாரத கொடித்துவக்கு, தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...