இலங்கை
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய, சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் அதனை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன விபத்து இடம்பெற்ற இடத்தை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், விபத்து இடம்பெற்ற தினத்தன்று (ஜனவரி 24 ஆம் திகதி) அந்த இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோருமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.