tamilni 516 scaled
இலங்கைசெய்திகள்

புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அவதானம்

Share

புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அவதானம்

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று (22.02.2024) கையளித்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதிகரிக்கப்பட்ட அதே சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக மின் கட்டணத்தை 3 சதவீதத்தினால் குறைப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.

அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கோரலில், அதனை விட அதிக சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான இயலுமை, இலங்கை மின்சார சபைக்கு உள்ளதாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...