இலங்கை
இலங்கை முழுவதும் காற்றின் தரத்தில் சரிவு:
இலங்கை முழுவதும் காற்றின் தரத்தில் சரிவு:
இலங்கை முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சரிந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அண்மைய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் ஆரோக்கியமற்ற காற்று நிலைமைகளுடன் போராடுகின்றன.
கொழும்பு, கண்டியின் அக்குரணை மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு மாசுபாட்டை பதிவு செய்துள்ளன.
அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின் தரவுகளை மேற்கோள் காட்டி, கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை ஆகிய எட்டு மாவட்டங்களை காற்றின் தரம் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் பகுதிகளாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் தமது வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.