Rasi palan new10 5 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

Share

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

கொழும்பில் செயற்படும் ஹோட்டல் ஒன்றுக்கு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம இன்று 50000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

சமைத்த உணவில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற மற்றும் பூஞ்சை பிடித்த மிளகை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் சார்பில் ஆஜரான ஹோட்டலின் உணவு மற்றும் குளிர்பான மேலாளர் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மத்திய கொழும்பு சுகாதார மருத்துவ அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி Cinnamon Lakeside Colombo ஹோட்டலில் இரவு உணவருந்தச் சென்ற தம்பதியர் தமக்கு கெட்டுப்போன சூப்பை வழங்கியதாக கோட்டை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதற்கமைய, இந்த வழக்கு தாக்கப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...