யாழ். கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (08.02.2024) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Comments are closed.