நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் பயணித்தால் அபராதம்
நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணிக்காமல் குறைந்த வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தற்போதைய அதிகபட்ச வேகமான மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் குறைந்தபட்ச வேகத்தை மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் அறிமுகப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்துகள் ஏற்படும் வகையில் குறைந்த வேகத்தில் பயணிக்கும் சாரதிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
இந்த மாத இறுதிக்குள் குறைந்தபட்ச வேக வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments are closed.