tamilnih 111 scaled
இலங்கைசெய்திகள்

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்

Share

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்

வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...