tamilnaadi 90 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

Share

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவை தொடர்ந்து இன்றைய தினம் 11 மணியளவில் திருகோணமலையில் வைத்து ஏனைய தெரிவுகள் நடைபெறவுள்ளன.

தலைவர் தெரிவின் போது பொது சபையில் பங்குபற்றியவர்களே இன்றைய நிகழ்விலும் பங்குபற்றுவார்கள்.

இதற்கு முன்னர் ஏற்கனவே இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்,முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

இதன்பின்னர் செயலாளர்,துணை செயலாளர், துணை தலைவர்கள் என்ற வகையில் சுமார் 33 பேர் மத்தியகுழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கு பின்னர் நான் செயலாளராக ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்தேன். இதற்கு பலரும் நான் ஏன் அவரை முன்மொழிய வேண்டும் என கேட்டனர்.அதற்கு காரணம் இருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு இறுதியை இடம்பெற்ற தேசிய மாநாட்டின் போது,பொதுச்செயலாளராக எனது பெயரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்திருந்தார்.அதனை எவருமே வழிமொழியவில்லை.

காரணம் ஏற்கனவே இருந்தவர்களை,தலைவர், செயலாளராக அமர்த்த அனைவரும் விரும்பினார்கள் அதனால் நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.

இப்போது எனக்கெதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதாவது நான் செயலாளராக வர முயற்சிக்கிறேன்,அதனால் தான் தலைவர் தெரிவில் சிறீதரனை ஆதரித்தேன் என கூறுகின்றனர்.அதை முறியடிக்கவே நான் தலைவர் தெரிவுக்கு முன்பாகவே ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்திருந்தேன்.

இன்றைய செயலாளர் தெரிவிலும் மட்டக்களப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனை தெரிவு செய்யவே அங்கு இருப்பவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கமைய இன்றைய மத்தியகுழு கூடத்திற்கும் இந்த முடிவு செல்லவுள்ளது. எனவே நிச்சயமாக போட்டிகளின்றி சிறீநேசனை பொதுச் செயலாளராக தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...