tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம்

Share

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம்

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் சொத்துக்களுக்கும் இக்குழுவினர் சேதம் விளைவித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றிரவு நாரம்மல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அந்த உத்தரவை மீறி லொறியின் சாரதி ஓட்டிச் சென்றதையடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் லொறியை துரத்திச் சென்று லொறியை நிறுத்தியுள்ளனர்.

சாரதியை பயமுறுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் தனது பணித்துப்பாக்கியை எடுத்தபோது அது இயங்கி துப்பாக்கி சூட்டிற்கு இழக்காகி லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 6
இலங்கைசெய்திகள்

நெடுந்தீவு தொல்பொருள் சின்னம் சேதம்: பிரதேச சபை தவிசாளர், ஒப்பந்ததாரர் பிணையில் விடுவிப்பு!

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை (சின்னத்தை) சேதப்படுத்திய விவகாரத்தில் இன்று (நவம்பர் 06) கைது செய்யப்பட்ட நெடுந்தீவு...

images 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல வழக்கு: நவம்பர் 26ஆம் திகதி விசாரணை!

அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்ளின் (Immunoglobulin) தடுப்பூசிகளைச் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக்...

25 68ef69138e4e5
இலங்கைஅரசியல்செய்திகள்

யோஷித ராஜபக்ஷ மீது பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கு: நவம்பர் 12 அன்று விசாரணைக்கு முந்தைய மாநாடு ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட்...

dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...