tamilnif 8 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வரி அடையாள எண்

Share

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையிலிருந்து வருமானம் ஈட்டினால் (வட்டி வருமானம், வாடகை வருமானம் அல்லது வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை மூலம் வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள்) கண்டிப்பாக TIN எண்ணை பெற வேண்டும்.

டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் கணினிகளை இணையப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பில் செயற்படுவதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...