31 11
இலங்கைசெய்திகள்

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

Share

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘இலங்கையை வெற்றியடையச் செய்வோம்’ என்ற உப தலைப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதா? இல்லையா? என்ற தீர்மானம் புதிய நாடாளுமன்றத்தால் எடுக்கப்படும். புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்யும் பணியும் புதிய நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும்.

சட்டவாக்கப் பேரவையின் அறிக்கைக்கு அமைய மாகாண சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இரண்டாவது மந்திரி சபை நிறுவப்படும்.

மாகாண சபைகளுக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்களால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த மந்திரி சபைக்கு வழங்கப்படும்.” – என்றுள்ளது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...