இலங்கைசெய்திகள்

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

Share
tamilni 393 scaled
Share

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும். வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமையவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். வரி தொடர்பில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்துக்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி விட்டு வரி அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என்று மக்கள் மத்தியில் குறிப்பிடுகிறார்கள்.

வரி அதிகரிப்பை தவிர எவ்வித திட்டங்களையும் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆனால் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.

முறையற்ற வகையில் வற் வரி உட்பட சகல வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டை காட்டிலும் அடுத்த ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும்.

வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மக்கள் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வரி கொள்கை அடுத்த ஆண்டு அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...