இலங்கை
காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
குருநாகல் பிரதேசத்தில் காதலியை சந்திக்க வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
அவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர – விகாரை வீதி பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கந்தளை, சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ரஸ்நாயக்கபுர, கோவில் வீதியில் வசிக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் தனது காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் வந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்குவாதத்தை அடுத்து இரண்டு நபர்களால் அவர் தடியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலின் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.