இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் தகவல்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் இந்த வருடத்துக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகளுக்கு இந்தத் தீர்மானம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு செலவினத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25 சதவீதக் கொடுப்பனவு அதிகரிப்பை தொடராதிருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.