ஒப்பரேசன் துவாரகா ஒரு புலனாய்வுச்சதி! ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா குறித்து காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த காணொளியில் தோன்றிய பெண் துவாரகா இல்லையெனவும், அவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது எனவும், அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்படுவதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் நீண்ட காலம் செயற்பட்ட இளங்குட்டுவன் என்ற போராளி முள்ளிவாய்காலில் நடந்த இறுக்கமான சண்டைகள். அந்த களங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவரும் அவரது குடும்பமும் தப்பித்து சென்றிருக்கும் வாய்ப்புக்கள் குறித்து பல உண்மைகளை விளக்கியுள்ளார்.
இவை உள்ளிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது குணாதிசயங்கள், போர் பற்றிய அவரது சிந்தனைகள்,விடுதலை பற்றிய அவரது இலட்சியம், தற்போதைய துவாரகா விவகாரம் போன்ற பல விடயங்களை சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
Comments are closed.