rtjy 100 scaled
இலங்கைசெய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வை கண்டித்தமையை நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 137 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தையும், சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தொகுத்துள்ளது.

இந்தநிலையில் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள இந்திய இராணுவம், போர்க்குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தலைமை விருந்தினராக வரவழைத்தமை ஏற்புடையதல்ல என்றும் உருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

Share
தொடர்புடையது
02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி...