இலங்கை
மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம்
மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம்
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்வைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிந்தது. மழைவீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் கடந்த 14 மாத காலமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். 12 பேர் மாத்திரமே கலந்துக் கொண்டார்கள்.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்த கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அஜித் பெரேரா ஆகியோர் தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான குழுவை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு எதிரணியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த குழுவை நானே நியமித்தேன். அமைச்சர் என்ற ரீதியில் நான் பொறுப்புக் கூற வேண்டும் ஆகவே என்னை சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள்.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மின்சார சபை சட்டத்தை திருத்தம் செய்யாமல் மின்கட்டமைப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிந்தது. மழைவீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.