tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நேர்முகத் தேர்விற்காக வந்த பெண் மரணம்

Share

கொழும்பில் நேர்முகத் தேர்விற்காக வந்த பெண் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாகும். அவர் இரண்டு பெண்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் என தெரியவந்துள்ளது.

இவரது தாயார் சந்தியா பதுளை மாநகர சபையில் பணிபுரிகிறார். இவரது தந்தை காமினி குணசேகர. அவரது மற்றுமொரு சகோதரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.

பல்கலைக் கழகக் கல்வியை முடித்து இரண்டு மாதங்களேயான நிலையில் உயிரிழந்துள்ளார்.

படிக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்திற்கமைய, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வின் ஆரம்ப பகுதி முடிந்துவிட்டாலும், இன்னொரு கட்ட நேர்முக தேர்வ இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த இரண்டு மூன்று நாட்களும் தன் பல்கலைகழக நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, இரவு 10.30 மணியளவில் அவரது நண்பர்கள் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் கடந்த 2ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடாத நிலையில் உடற் பாகங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...