rtjy 18 scaled
இலங்கைசெய்திகள்

அண்ணனை கொலை செய்து தீயிட்டு கொழுத்திய தம்பி

Share

அண்ணனை கொலை செய்து தீயிட்டு கொழுத்திய தம்பி

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தனது சகோதரனை தடியால் தாக்கி கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் இளைய சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மனம்பேரிகே கருணாதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சகோதரன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான சகோதரன் ஆகிய இருவரின் வீடுகளும் ஒரே காணியில் அமைந்துள்ளதுடன் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

அவர் மாதம் ஒருமுறை கிராமத்து வீட்டுக்கு வந்து இலவங்கப்பட்டை அரைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தெஹியத்தகண்டிக்கு செல்வதாக கூறப்படுகிறது.

கடந்த 28ஆம் திகதி வீட்டுக்கு வருவதாக கூறியும் அவர் வரவில்லை என அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

28ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது சகோதரனை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் அவரது உடலுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையில் சந்தேக நபரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அவருடன் பகையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...