tamilni 468 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை

Share

வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை

வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத் தம்பதியினரின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பின்னால் உள்ள தங்கும் இடத்தில் மேற்படி தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழமைபோல் அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற போது தம்பதியினர் வியாபார நிலையத்துக்குப் பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றனர்.

இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாகச் செட்டிகுளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்தச் சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் என்ற வயோதிபரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் இரத்தங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அந்தக் கத்திகளாலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை திருட்டில் ஈடுபடும்போது இடம்பெற்றதா அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக நடைபெற்றதா போன்ற கோணங்களில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...