இலங்கை
45 சதவீதத்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
45 சதவீதத்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது தனிநபர் கடன் சுமை அதிகரிப்புக்கு 90 சதவீதம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.