இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு
சரியான நேரம் வரும்போது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி – கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு ஏதேனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறீர்களா?
“தற்போது ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து, ஐசிசியுடன் பேசுவதற்கு அவர்களை அனுப்பியுள்ளனர்.
தற்போதைய சட்டத்தின்படி, கிரிக்கெட் வாரியத்திற்குச் சென்று வேலையைச் செய்யலாம். எனினும் நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் செல்ல மாட்டோம்.
இந்தப் பிரச்சினை முடியும்வரை வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டோம். இலங்கை கிரிக்கெட்டிற்க்கு எந்த தடையும் இல்லை என்ற முடிவுக்காக காத்திருக்கிறோம். நேரம் வரும்போது இவற்றை மிக விரைவாக சரி செய்துவிடலாம்” என்றார்.
Comments are closed.