இலங்கை
அதிகரிக்கும் வற் வரி : கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல்


அதிகரிக்கும் வற் வரி : கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல்
ஜனவரி மாதத்தில் வற் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் அது, மக்களுக்கான மின் கட்டணம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக வங்கியுடனான இணக்கப்பாட்டுக்கு இணங்க அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வற் வரியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் அது தற்காலிக வேலைத் திட்டமாகவே முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரியில் அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் வரி வலையமைப்பில் விரிவான முறைப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், அதன் மூலமாக நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.