இலங்கை
இலங்கை கையெழுத்திடவுள்ள இருவேறு ஒப்பந்தங்கள்


இலங்கை கையெழுத்திடவுள்ள இருவேறு ஒப்பந்தங்கள்
இலங்கை இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் (13.11.2023) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எட்கா என்ற பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முதன்மையாக வர்த்தக சேவைகள் மற்றும் சேவைத் துறை தொடர்பில் சேர்க்கும் வகையில் முன்மொழியப்பட்ட இராஜதந்திர ஏற்பாடாகும்.
இதேவேளை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சீனா மற்றும் ஜப்பானின் ஆதரவுடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை இலங்கை மீண்டும் ஆரம்பிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.