ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் மரணம்

rtjy 153

ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் மரணம்

தென்னிலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு சேவை அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

68 வயதான ஜேர்மன் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்ததாக தெரிய வந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிழலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே.பி.ஆர்.பெரேரா மேற்கொண்டார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகள் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றுள்ளன.

Exit mobile version