இலங்கை
அமைச்சு பதவியை துறக்க தயாராகும் ரொஷான் ரணசிங்க
அமைச்சு பதவியை துறக்க தயாராகும் ரொஷான் ரணசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்து அமைச்சு பதவியில் இருந்த ரொஷான் ரணசிங்க பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்து வரும் சில நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏற்கனவே ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்தி, இடைக்கால நிர்வாக சபையை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்திருந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் இந்த பதவி விலகல் ஏற்படவுள்ளது.
ஆளும்கட்சி அமைச்சரான ரொஷான் ரணசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது