rtjy 135 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வரவு செலவுத் திட்டம்: இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ரணில்

Share

வரவு செலவுத் திட்டம்: இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ரணில்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி (12.10.2023) கலந்துகொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...