இலங்கை

நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன்

Published

on

நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன்

நீதிமன்றம் சென்று சொந்த பணத்தையேனும் செலவு செய்து இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நிலைமையை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நாட்டைக் காட்டிக்கொடுத்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அமைப்பு உருவாக்கப்பட்டால், ஜனாதிபதி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நாளை கோரவுள்ளேன். இதைத் தடை செய்ய அடித்தளமிட்டவர்கள் வழங்கிய சாட்சியம் என்ன? அதைச் செய்து நம் நாட்டில் கிரிக்கெட்டை அழிக்க முயன்றது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என அவரிடம் கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version