tamilni 130 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேருக்கு விளக்கமறியல்

Share

யாழில் 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேருக்கு விளக்கமறியல்

யாழ். கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவை நேற்று(08.11.2023)யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே சில நாள்களாக நீடித்த முரண்பாடு மோதலாக மாறிய நிலையில் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, இரண்டு தரப்பிலுமாக 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நபர்களைத் தாக்கியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் 23 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 23 பேரையும் வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...